Divisions
National Language
Contact Details
|
|||||||||
பெயர் - திட்டமிடல் பிரிவு
அறிமுகம்
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக அமைச்சிடம் ஒப்படைக்கப்படும் திட்டமிடல் பணிகளுக்கு உட்படும் செயற்பாடுளை திட்டமிடல், வழிகாட்டுதல்கள் மற்றும் மூலோபாயங்களைத் தயாரித்தல், நிகழ்ச்சித்திட்டங்கள், கருத்திட்டங்கள், திட்டமிடல்கள், அமுல்நடாத்தல், செயற்படுத்துதல், மதிப்பீடு செய்தலைப் போன்றே அதனுடன் தொடர்பான சேவைகளை நிறைவேற்றுவதற்காக திட்டமிடல் பிரிவு நிறுவப்பட்டுள்ளது.
தொலைநோக்கு
"மனித வளத்தை திறன் வாய்ந்ததாகப் பயன்படுத்துவதன் மூலம் சுத்தமான, வினைத்திறனானதும் தனித்துவமானதுமான அரச சேவையை உறுதிப்படுத்தல்."
பணிக்கூற்று
"அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள திட்டமிடல் விடயப் பரப்பிற்குரியதான பணிகளையும் செயற்பாடுகளையும் சிறப்பாக திட்டமிடல், அமுல்நடாத்தல், செயற்படுத்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்."
" அமைச்சின் நோக்கங்களை நிறைவேற்ற தேவையான மூலோபாயங்களையும் கொள்கைகளையும் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல்."
நோக்கங்கள்
- “தேசத்திற்கான சிறந்ததோர் அரச சேவை” ஏற்படுத்திக் கொடுப்பதற்கான இலக்கினை அடைய உசிதமான திட்டமிடல் வழிகாட்டல்கள் மற்றும் மூலோபாயங்களை நடைமுறைப்படுத்தல்.”.
- அரசாங்கத்தின் சமூகப் பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இணக்கமான முறையில் அமைச்சின் மூலோபாயத் திட்டங்களைத் தயாரித்தல்.
பணிகள்
- அமைச்சின் செயற்பாட்டுத் திட்டம் மற்றும் செயலாற்றுகை அறிக்கையைத் தயாரித்தல்.
- அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் தொடர்பான நடவடிக்கைகள்.
- கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மறுசீரமைப்புத் திட்டம், முன்னேற்ற அறிக்கைகள், வருடாந்த அறிக்கைகள் மற்றும் வருடாந்த மதிப்பீடுகளை தயாரிக்கும் பணிகளை மேற்பார்வை செய்தல் மற்றும் அவற்றை உரிய நேரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தேவையான நடவடிக்கை எடுத்தல்.
- அமைச்சுக்குத் தேவையான தரவுத் தளத்தைத் தயாரித்தல் மற்றும் இற்றைப்படுத்தல்.
- அமைச்சின் மற்றைய பிரிவுகளுக்குத் தேவையான தகவல்களை வழங்குதல்.
- மேலதிகச் செயலாளரின் ( மனித வள அபிவிருத்தி) கீழ் மேற்பார்வை செய்யப்படும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அவசியப்படும் வகையிலும் செயலாளரின் ஆலோசனையின் பேரிலும் ஒருங்கிணைப்புக்களை மேற்கொள்ளல்.
- அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் வெளிநாட்டுத் திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தல் மற்றும் தொடர் நடவடிக்கை எடுத்தல்.
நிறுவனக் கட்டமைப்பு
தொடர்பாடல் தகவல்கள்
![]() பணிப்பாளர் ( திட்டமிடல்)
|
![]() பிரதி / உதவிப் பணிப்பாளர் ( திட்டமிடல்)
|
![]() பிரதி / உதவிப் பணிப்பாளர் ( திட்டமிடல்)
|
தொலைபேசி | : | +94 0112691667 (நீட்சி - 118) |
தொலைநகல் | : | +94 01122662301 |
மின்னஞ்சல் | : | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
சீர்திருத்த பிரிவு
தொடர்பு விபரங்கள்
|
|||||||||
கனேடிய உயர் ஸ்தானிகர், அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருடனான சந்திப்பு...
A meeting between the Canadian High Commissioner to Sri Lanka David McKinnon and the Minister of Public Service Provincial Councils and Local Government Janaka Bandara Tennakoon took place at the Ministry today (09). During the meeting, the High Commissioner shared the pleasure of the Canadian Government with the Minister over the Government's victory in the last election. He also stated that his government is willing to provide assistance for a language promotion campaign at the provincial level to provide solutions to the communication problems of the people of this country. The Minister and the High Commissioner also exchanged views on the potential of the small scale tourism industry for the empowerment of women in the country.
Mr. J.J. Ratnasiri, Secretary of the Ministry and Mr. Mahinda Madihahewa, Adviser to the Ministry were also present on the occasion.
உள்ளக கணக்காய்வுப் பிரிவு
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின், பொது நிருவாக பிரிவுக்குரிய உள்ளக கணக்காய்வுப் பிரிவு, நி.பி. 133 இன் பிரகாரம், அமைச்சின் செயலாளருக்கு நேரடியாக பொறுப்புக்கூற வேண்டிய பிரதான உள்ளக கணக்காய்வாளர் ஒருவரின் கீழ் இயங்கி வருகின்றது. அக்கிளைத் தலைவர் உட்பட 12 உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர்களையும், ஒரு அலுவலக உதவியாளர் மற்றும் சாரதி ஒருவரையும் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட பணியாட்தொகுதியினரைக் தன்னகத்தே கொண்டுள்ளது.
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினதும், அதன் கீழ் இயங்கும் ஓய்வூதியத் திணைக்களம், இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகம், அரச சேவை ஓய்வூதியகாரர்களின் நம்பிக்கை நிதியம், தொலைக் கல்வி நிலையம், அரசகரும மொழிகள் திணைக்களம், அரசகரும மொழி ஆணைக்குழு, மனித வள மேம்பாட்டிற்கான தேசிய ஆணைக்குழு, தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சிக்கான நிறுவனம், பாராளுமன்ற விவகாரப் பிரிவு, அரசகரும மொழிப் பிரிவு மற்றும் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயற்திட்டங்களுக்கு உரித்தான உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பும், அதற்கு மேலதிகமாக தேவைப்பாட்டுக்கு ஏற்ப விசேட சோதனைகளும் உள்ளக கணக்காய்வுப் பிரிவின் விடயப் பரப்பினுள் உள்ளடக்கப்படுகின்றது.
தொலைநோக்கு
“தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் தூய்மையான ஆட்சியை ஏற்படுத்தவும் பயனுறுதி மிக்க மனித வளம் கொண்ட அரச சேவையை தோற்றுவித்தல்”
பணிக்கூற்று
"அமைச்சினதும் அமைச்சின் கீழ் இயங்குகின்ற திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் நிதிசார் நடவடிக்கைகள் தொடர்பாக நிலவுகின்ற உள்ளகக் கட்டுப்பாட்டு முறையில் பங்கேற்று, அந்நடவடிக்கைகளில் ஏற்படும் தவறுகள் மற்றும் மோசடிகளைத் தடுத்தல். அத்துடன் அவற்றை நிவர்த்தி செய்து கொள்வதற்காக பிரயோகிக்கப்படும் உள்ளக பரிசோதனைகளின் ஒழுங்குமுறை மற்றும் நியமங்கள் குறித்து தொடர்ந்தேர்ச்சியான கணிப்பாய்வு மற்றும் சுயாதீன மதிப்பீட்டினை மேற்கொண்டு பயனுறுதிமிக்க மனித வளத்தின் ஊடாக அரச வளங்களை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல்"
உள்ளக கணக்காய்வுப் பிரிவின் பணிகள்
- அமைச்சின் மேற்பார்வையின் கீழ் காணப்படும் நிறுவனங்களின் உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகளை நிறைவேற்றும் போது நிதிப் பிரமாணம் 133 இன் படி பின்வருமாறு குறித்துரைக்கப்பட்டுள்ள பணிகள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்துகின்றது.
- தவறுகள் மற்றும் மோசடிகளைத் தடுப்பதற்காக திணைக்களம் / நிறுவனத்தினுள் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளக பரிசோதனைகள் மற்றும் கட்டுப்பாட்டு முறைகள், திட்டங்களைப் போன்றே உண்மையான செயற்பாடுகள் ரீதியாகவும் வெற்றிகரமாக உள்ளதா எனக் கண்டறிதல்.
- கணக்கு மற்றும் ஏனைய அறிக்கைகளில் நம்பிக்கைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக கையாளப்பட்டுள்ள கணக்கியல் ஒழுங்கு முறைகளின் மூலம் பிழையற்ற நிதிக் கூற்றுக்களை தயாரிப்பதற்காக அவசியப்படும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பதனை கண்டறிதல்.
- நிறுவனத்தின் பணியாட்தொகுதியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றுவதற்கு அவர்களின் செயலாற்றுகைத் தரத்தை மதிப்பீ செய்தல்.
- திணைக்களம் / நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துக்கள், சகல விதத்திலும் நட்டங்களிலிருந்து எவ்வளவு துாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதனை கண்டறிதல்.
- அரசாங்க தாபன விதிக்கோவை , அரசாங்க நிதிப் பிரமாணம் மற்றும் பொது நிருவாக விடயப் பொறுப்பு அமைச்சினால் மற்றும் பொதுத் திறைசேரியினால் அவ்வப்போது வெளியிடும் சுற்றறிக்கைகள் மற்றும் ஏனைய குறைநிரப்பு ஆலோசனைகள் என்பன பின்பற்றப்படுகின்றனவா என கண்டறிதல்.
- வீண்விரயம், செயற்பாடற்ற மற்றும் அளவினை விஞ்சிய வகையில் செலவு செய்வதனைத் தடுப்பது போன்றே, அவற்றைக் கண்டறியப்படுவதற்கு கையாளப்படுகின்ற உள்ளக கட்டுப்பாட்டு முறையின் தர நியமங்களையும் ஆராய்தல்.
- திணைக்களத்தின் கணக்கு நடைமுறைகள் மற்றும் ஏதேனுமொரு வகையில் நிதி செலவாவதற்கு காரணமாக அமையும் செயற்பாடுகளை பரீட்சித்துப் பார்த்தல் மற்றும் திணைக்களத்தின் சொத்துக்கள் மற்றும் வளங்களைப் பாதுகாப்பாகவும் சிக்கனமாகவும் முறைசார்ந்தவாறு பிரயோகிக்கப்படுகின்றா என்பதனை ஆராய்தல்.
- தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளல்.
- உற்பத்தித்திறன் வாய்ந்த செயற்திறனிற்காக தொகுதி ரீதியான பகுப்பாய்வு மற்றும் செயற்திறனை பகுப்பாய்வு செய்தல்.
- முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களத்தினால் அவ்வப்போது பிரசுரிக்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களுக்கு ஏற்ப செயற்படுவதும், அந்தந்த வருடங்களின் சகல காலாண்டுக்கும் ஒரு முறை அமைச்சின் கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டங்களை நடாத்துதல், அக்கூட்டங்களில் எட்டப்படும் முடிவுகளை செயற்படுத்துகையினால் ஏற்படும் முன்னேற்றம் தொடர்பாக தொடர் நடவடிக்கைகளை எடுப்பது இப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மற்றொரு பணியாகும்.
- ஓய்வூதியம் செலுத்துதல் தொடர்பாக பரீட்சித்துப் பார்ப்பதன் மூலம் ஓய்வூதியம் தொடர்பில் ஏற்பட்டுள்ள ஊழல், மோசடி மற்றும் ஒழுங்கின்மை குறித்து அவதானம் செலுத்துவதும், ஓய்வூதியம் செலுத்துதல் சம்பந்தமான விபரங்களை தரவுத் தளத்தில் மற்றும் ஓய்வூதிய கடிதக் கோப்புக்களில் உள்ள பிணக்குகளை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுத்தல்.
உள்ளக கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது முடிவுகளை எடுக்கப் பிரயோகிக்கும் ஆவணங்கள்
- தாபன விதிக்கோவை
- நிதிப் பிரமாணம்
- அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை
- முகாமைத்துவ கணக்காய்வுச் சுற்றறிக்கை
- உள்ளக கணக்காய்வு வழிகாட்டல்
தொடர்பு விபரங்கள்
![]() பிரதான உள்ளகக் கணக்காய்வாளர்
|
||||||||||
உள்ளக கணக்காய்வுப் பிரிவு
|
|||||||
சுதந்திர சதுக்கம், கொழும்பு 07 இல் அமைந்துள்ள பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பிரதான கட்டிடத்தை அடுத்துள்ள கட்டிடத்தின் முதலாவது மாடியில் தாபிக்கப்பட்டுள்ளது. |